• Tamil calendar referral program


    சித்திரை தமிழ் நாட்காட்டியை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பரிந்துரைப்பதன் மூலம் நீங்கள் இருந்த இடத்திலிருந்தே சம்பாதிக்கலாம்.

    நமது சித்திரை தமிழ் நாட்காட்டி வழக்கமான நாட்காட்டிகளை போல இல்லாமல் தமிழ் மாத அடிப்படையில் சித்திரையில் துவங்கும் தனிச் சிறப்புடையது. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.

    நாங்கள் கொடுக்கும் பரிந்துரை லிங்கை (referral link) Facebook, WhatsApp, YouTube போன்ற சமூக வலை தளங்களில் பகிருங்கள்.

    உங்களது referal link மூலமாக போடப்படும் ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ 10 உங்களுக்கு கமிஷனாக கிடைக்கும். அது மட்டுமின்றி ஒவ்வொரு 10 ஆர்டர்களுக்கும் ஊக்க தொகையாக ரூ 25 உங்கள் கணக்கில் சேரும்.

    நமது சித்திரை தமிழ் நாட்காட்டி தனித்துவமும் தனிச் சிறப்புகளும் கொண்டது என்பதாலும் வரும் தமிழ் புத்தாண்டு காலத்தில் மட்டுமே வாங்க கிடைக்கும் என்பதாலும் மக்கள் நம் நாட்காட்டியை வாங்கும் வாய்ப்புகள் அதிகம்.

    உங்களுக்கான referral link உங்களது seedsprints.in login -ல் கிடைக்கும்.
    seedsprints.in ல் அக்கவுண்ட் இல்லாதவர்கள் கீழே உள்ள பட்டனை அழுத்தி உங்களது மொபைல் எண்ணை கொடுத்து Signup பண்ணி referral link ஐ பெற்று கொள்ளலாம்.

    Login / Signup

    கொஞ்சம் கொஞ்சமாக நமது தமிழ் மாதங்கள் பயன்பாடு குறைந்து கிட்டத்தட்ட அடுத்த தலைமுறையினர் தமிழ் மாதங்கள் பற்றி தமிழ் பாடத்தில் மட்டும் படித்து மறந்து கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

    இன்னும் சொல்ல போனால் இதை படித்து கொண்டிருக்கும் உங்களால் 12 தமிழ் மாதங்களையும் வரிசையாக சொல்ல முடிகிறதா என்று பாருங்கள். இன்றைய தமிழ் மாதம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா.

    தமிழ் மாதங்கள் எவ்வளவு தூரம் வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கிறது என உங்களால் உணர முடிகிறதா ? ?

    தமிழ் மாதங்களை மறுபடி பயன்பாட்டிற்க்கு கொண்டு வருவோம். தமிழ் மாத நாட்காட்டியை உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்களிடமும் கொண்டு சேர்ப்போம்.